Categories
சினிமா தமிழ் சினிமா

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் “கொன்றால் பாவம்”… வெளியான பட அப்டேட்…!!!!

ஹைதராபாத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் தற்போது கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். கொன்றால் பாவம் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் 1981-களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையை கொண்டு எடுக்கப்படுகிறது.

மேலும் இத்திரைப்படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்பிரமணியம் சிவா, இம்ரான், சென்ராயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். சாம் சி.எஸ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ராதாகிருஷ்ணன் மற்றும் மனோஜ் குமார் இணைந்து தயாரிக்கின்றார்கள். ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு நடந்து வந்த முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

Categories

Tech |