Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் கடற்கரையில்…. பழமையான நந்தி சிலை கண்டெடுப்பு…!!!

திருச்செந்தூர் கடற்கரையில் பழமையான சேதமடைந்த சிலை கிடைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் பழமை வாய்ந்த முருகன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் 12 வருடங்களுக்கு ஒரு முறை மகா கும்பாபிஷேகம் நடைபெறும். அந்த வகையில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக கோவிலில் பழமையான சேதமடைந்த சிலைகளை சரி செய்வதும் அதற்கு மாற்றாக புதிய சிலையை அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.

இதில் சேதமடைந்த சிலைகளை கடல் மற்றும் நீர்நிலைகளில் போட்டு விடுவார்கள். இந்த நிலையில் சென்ற இரண்டு நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதில் திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று நந்தி சிலை ஒன்று சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றார்கள்.

Categories

Tech |