Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கியபடி பயணம்… மாணவருக்கு நேர்ந்த கொடுமை… மருத்துவமனையில் சிகிச்சை…!!!!

படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவர் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் பிரண்டார்குளம் பள்ளி தெருவை சேர்ந்த டேவிட் மனக்காஸ் என்ற இளைஞர் நாசரேத்தில் இருக்கும் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் சம்பவத்தன்று காலையில் தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். இந்த பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்றபடி அவர் பயணித்திருக்கின்றார்.

அப்போது பேருந்து வேகத்தடையை கடந்த போது இவரின் கால் சாலையில் உரசி இருக்கின்றது. இதில் பெருவிரல் உடைந்தும் அடுத்தவிரல் முறிந்ததாகவும் சொல்லப்படுகின்றது. பின் ரத்த வெள்ளத்தில் துடி துடித்த இவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவருக்கு அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டதில் பெருவிரல் துண்டிக்கப்பட்டு அடுத்த விரல் கம்பி வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கின்றது. தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் தனியார் பேருந்து டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |