Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரகசிய தகவல்…. போலீசரின் வாகன சோதனை… காரில் திமிங்கல உமிழ்நீர் கடத்தல்…. போலீசார் அதிரடி…!!!!

உடன்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதில் திமிங்கலத்தின் உமிழ் நீர் கைப்பற்றப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடியில் சிலர் திமிங்கலத்தின் உமிழ் நீரை விற்பனைக்காக எடுத்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகப்படும்படி அவ்வழியாக வந்து காரை நிறுத்தி சோதனை செய்தார்கள். அதில் மூன்று பேர் இருந்த நிலையில் அவர்களிடம் விசாரணை செய்ததில் முன்னுபின் முரணாக பேசினார்கள்.

இதன்பின் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ததேயூஸ் பெனிஸ்றோ, ஆல்வின், வேணுகோபால் லிட்டர் என்பதும் இவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் திமிங்கலத்தின் உமிழ்நீர் 11 கிலோ இருந்ததும் தெரியவந்தது. இதன்பின் போலீசார் அதை பறிமுதல் செய்ததோடு காரையும் பறிமுதல் செய்து மூன்று பேரையும் கைது செய்தார்கள். இதன் மதிப்பு 11 கோடி ஆகும். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |