காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலத்தை அடுத்திருக்கும் பழையூரை சேர்ந்த விவசாயி தங்கமுத்து என்பவர் தனது தோட்டத்தில் பருத்தி சாகுபடி செய்திருக்கின்றார். இதனால் தற்போது உரம் வைக்கும் பணி நடந்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 9: 30 மணி அளவில் தொழிலாளர்கள் உரம் வைப்பதற்காக சென்றார்கள்.
பாப்பாத்தி என்பவர் வேலை செய்து கொண்டிருந்தபோது பருத்திச் செடிக்குள் மறைந்திருந்த காட்டுப்பன்றி அவரை தாக்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டதால் காட்டுப்பன்றி ஓடிவிட்டது. இதன்பின் அங்கிருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.