மலைவாழ் குடியிருப்பில் கனமழை பெய்ததால் வீடுகள் சேதமடைந்தது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றது. அந்த வகையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கன மழை பெய்ததால் தாக்குபிடிக்க முடியாமல் பழனிசாமி மற்றும் கண்ணன் உள்ளிடோரின் வீடுகள் சேதமடைந்தது.
இது பற்றி மலைவாழ் மக்கள் கூறியுள்ளதாவது, வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்ற எங்களுக்கு இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரட் வீடுகளை கட்டித் தருமாறு பல வருடங்களாக போராடி வருகின்றோம். இருப்பினும் எங்களின் கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு படுகாயம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. ஆகையால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.