Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகள் சரியாக அகற்றவில்லை… பொதுமக்கள் சாலை மறியல்… தாசில்தார் பேச்சுவார்த்தை..!!!

வேட்டவலம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் சாலையில் விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியானது சென்ற சில நாட்களாக நடந்து வருகின்றது. இதில் 210 வீடுகளுக்கு அகற்றுவதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் வேட்டவலம் சாலையில் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு இருக்கும் பகுதிகளில் 20 அடிக்கு மேல் வீடு, கடைகள் அகற்றப்பட்டிருக்கின்றது.

ஆனால் இதற்கு அடுத்திருக்கும் பகுதிகளில் மூன்றடி மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் நாளை வருவாய் துறையினர் மூலமாக முறையாக அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கூறிய பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றார்கள்.

Categories

Tech |