நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் இன்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனால் திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து கூறினார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கின்றார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, உன்னுடன் எனக்கு இது ஒன்பதாவது பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்தநாளுமே ஸ்பெஷல் ஆனது. மறக்க முடியாதது. இந்த வருடம் கணவன் மனைவியாக அழகான இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோராக இன்னும் ஸ்பெஷல். நான் உன்னை எப்போதும் தைரியமான பெண்ணாகவே பார்க்கின்றேன். நீ எதை செய்தாலும் அதை நம்பிக்கையுடன் அர்ப்பணிப்புடன் செய்கின்றாய். உனது நேர்மையால் எப்போதும் ஈர்க்கப்பட்டவன் நான்.
ஆனால் இப்போது உன்னை குழந்தைகளின் அம்மாவாக பார்க்கிறேன். நீ இப்போது தன்னிறைவு அடைந்ததாக உணர்கின்றேன். இப்போது இன்னும் நீ அழகாக தெரிகின்றாய். குழந்தைகள் உன்னை முத்தமிடுவதால் நீ இப்போது மேக்கப் போடுவதில்லை. இப்போது உனது முகத்தில் இருக்கும் புன்னகையும் மகிழ்ச்சியும் எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டுகின்றேன். என்னுயிர், உலகம் எல்லாம் நீதான். லவ் யூ பொண்டாட்டி. தங்கமே..! பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் லேடி சூப்பர் ஸ்டார் என கூறியுள்ளார்.