ஜெயிலர் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் திடீரென மழையின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கின்றது. சென்ற வாரம் தமிழகத்தில் பலத்த மழை பெய்தால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. தற்போது மேலும் குளிர் நிலவி வருவதால் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு படபிடிப்பு 15 நாட்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்றது. இதை அறிந்த ரசிகர்கள் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா என கவலையில் இருக்கின்றார்கள்.