Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய தொடரில் நடிக்கும் ஆல்யா…. ஆனால் அந்த தொலைக்காட்சி இல்லையாமே… வெளியான புதிய அப்டேட்…!!!!

நடிகை ஆல்யா மானசா புதிய தொடரில் பிரபல தொலைக்காட்சியில் நடிக்க இருக்கின்றாராம்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சின்னத்திரை நடிகையாக மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. ராஜா ராணி1-ல் தொடங்கி ராஜா ராணி2  சீரியலிலும் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடிக்கும் போது இவருக்கும் சஞ்சீவ்விக்கும் காதல் மலர்ந்து திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். சீரியலில் நடித்து வந்த இவர், இரண்டாவது முறையாக கர்ப்பமாகஇருந்ததால் அண்மையில் சீரியலிருந்து வெளியேறினார்.

சென்ற சில மாதங்களுக்கு முன்பாகவே புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறினார். ஆனால் எந்த தொலைக்காட்சியில் என கூறவில்லை. இந்த நிலையில் அவர் தனது புதிய சீரியலின் படபிடிப்பை ஆரம்பித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள சரிகம ப்ரொடக்ஷன் தயாரிக்கும் புதிய தொடரில் நடிக்க இருக்கின்றாராம்.

Categories

Tech |