யாஷின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய சினிமா உலகில் கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் யாஷ். இத்திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை யாஷ் பிடித்துள்ளார். கேஜிஎப் வெற்றியை தொடர்ந்து இந்த வருடம் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது.
அதாவது 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து உலக அளவில் சாதனை படைத்தது. இத்திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான நடிகர் யாஷின் சிறுவயது புகைப்படம் வெளியாகியிருக்கின்றது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றார்கள்.