Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சி…. வனத்துறையினருக்கு வந்த தகவல்… அதிரடி நடவடிக்கை..!!!

சேலத்தில் குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருந்ததால் வனத்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே இருக்கும் வெள்ளார் சின்னம்மம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது வீட்டில் இருக்கும் குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சியை வைத்து இருப்பதாக டேனிஷ் பேட்டை வனச்சரகர் தங்கராஜுக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.

அதன் பேரில் வனத்துறையினர் கோவிந்தராஜ் வீட்டை சோதனை இட்டார்கள். அப்போது அவர் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சி இருந்துள்ளது. இதனை வனத்துறையினர் பறிமுதல் செய்து அவரை விசாரணைக்காக வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். மேலும் அவருக்கு 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்பின் இறைச்சியை வனத்துறையினர் குழிதோண்டி புதைத்தார்கள். மேலும் அவருக்கு எப்படி காட்டுப்பன்றி இறைச்சி கிடைத்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |