Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கருப்பு நிற உருவம் என்னை குதிக்கச் சொன்னது”… மாடியில் இருந்து குதித்த மாணவி…. படுகாயங்களுடன் சிகிச்சை…!!!

பிளஸ்-1 படிக்கும் மாணவி பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ்1 படித்து வருகின்றார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் தற்போது வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்கின்றார். இந்த நிலையில் சென்ற பதினைந்தாம் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்ற மாணவி காலை 11:30 மணியளவில் பள்ளியின் மாடிக்கு சென்றிருக்கின்றார். அப்போது அவர் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்து இருக்கின்றார். இதனால் அவருடைய காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த மாணவிகளும் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்து தூத்துக்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். தற்போது மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து மாணவியின் தந்தை சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கருப்பு நிறம் கொண்ட உருவம் என்னை மாடியில் இருந்து குதிக்கச் சொன்னது. அதனால் தான் மாடியில் இருந்து குதித்து விட்டேன் என எனது மகள் கூறுகின்றார் என குறிப்பிட்டு இருக்கின்றார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மாணவிக்கு ஏற்கனவே மனதளவில் லேசான பாதிப்பு இருந்த நிலையில் விடுதியில் தங்கி படித்த மாணவி தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த காரணத்தால் மாணவி மாடியிலிருந்து குதித்திருக்கலாம் என தெரிகின்றது. தற்போது மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மருத்துவமனை மூலம் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இருக்கின்றோம் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |