கலகத் தலைவன் திரைப்படத்தின் திரைவிமர்சனம் ஓர் பார்வை.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள். இந்த நிலையில் இப்படம் நேற்று வெளியாகியுள்ளது.
தற்போது படம் எப்படி இருக்குது என்று பார்க்கலாம். ட்ருபேடார் என்ற கார்ப்பரேட் நிறுவனம் குறைவான பெட்ரோலில் அதிக மைலேஜ் தரும் வாகனத்தை கண்டுபிடித்து அதனை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய தயாராகின்றது. அப்போது வாகனத்தில் இருந்து வெளியேறும் புகை காற்று மாசுவை உண்டாக்கும் என தெரிகின்றது. இந்த விஷயத்தை வெளியே கசிய விடக்கூடாது என நிறுவனத்தின் உரிமையாளர் இதைத் தெரிந்தவர்களிடம் கூறுகின்றார்.
ஆனால் விஷயம் எப்படியோ எதிரி நிறுவனத்திடம் கசிந்து விடுகின்றது. இதனால் ட்ருபேடார் அறிமுகம் செய்த வாகனத்தின் மேல் பல விமர்சனங்கள் மற்றும் ஷேர் பங்குச்சந்தையில் குறைய தொடங்குகின்றது. ஏற்கனவே நஷ்டத்தில் இருந்த நிறுவனத்திற்கு மேலும் அடி விழுகின்றது. இதனால் தன்னுடைய எதிரி நிறுவனத்திற்கு இந்த விஷயத்தை கசிய வைத்தது யார் என கண்டுபிடிக்க உரிமையாளர் மூலம் ஆரவ் நியமிக்கப்படுகின்றார்.
அவர் கீழ் மட்டத்திலிருந்து கொடூரமான முறையில் விசாரணை செய்து ஒவ்வொருவரிடமிருந்து பல உண்மைகளை வாங்கி வருகின்றார். இறுதியில் அந்த அனைத்து கலகத்திற்கும் காரணம் யார்? இந்த ரகசியங்களை தெரிவித்த அந்த மர்ம நபர் யார்? ஏன் அப்படி செய்கின்றார்? இதில் உதயநிதிக்கு என்ன சம்பந்தம் என்பதே படத்தின் மீதி கதையாகும். படத்தில் ஹீரோவின் நடிப்பு ஓகே. படத்திற்கு தேவையான நடிப்பையும் ஆக்ஷனையும் கொடுத்திருக்கின்றார். இதில் வில்லனாக வரும் ஆரவ் அனைவரையும் மிஞ்சி படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றார்.
இதில் ஹீரோயின் நிதி அகர்வால் படத்தில் எதற்கு இருக்கின்றார் என்றே தெரியவில்லை. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கலையரசனின் நடிப்பு ஓகே. மகிழ் திருமேனி எடுத்துக் கொண்ட கதைக்கு பாராட்டுகள். அவரின் இயக்கத்திற்கு கைதட்டல்கள். இடைவெளி காட்சி மாஸாக இருக்கின்றது. இருப்பினும் தடம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு வெளியாகி உள்ள இந்த படம் சற்று ஏமாற்றத்தை தந்திருக்கின்றது. ஆக்ஷன் காட்சிகள் பிரம்மாதமாக இருக்கின்றது. தில்ராஜின் ஒளிப்பதிவு படத்தை தாங்குகின்றது. மேலும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்க்கின்றது. மொத்தத்தில் கலகத் தலைவன் அவரேஜ்தான்.