Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி மையங்களில் முறையாக உணவு வழங்கப்படுகின்றதா…? தூத்துக்குடியில் அதிகாரி ஆய்வு..!!!

கண்காணிப்பு அலுவலர் தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு உணவு சரியாக வழங்கப்படுகின்றதா என ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலராக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன் தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருக்கின்றார். நேற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அதன்படி வரதராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் முறையாக வழங்கப்படுகின்றதா என ஆய்வு மேற்கொண்டார். அங்கன்வாடி மையம், கக்கன் பூங்கா அருகே இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் விடுதி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையம் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவ கிடங்கில் காலாவதியான மருந்துகள் இருக்கின்றதா? என்பது மருந்துகளில் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.

Categories

Tech |