Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில்… விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்..!!!

கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் செவல்பட்டி கிராமத்தில் இருக்கின்ற மாந்தோப்பு விநாயகர் கோவிலை வருவாய் துறையினர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இடித்ததை கண்டித்தும் அந்த கோவிலை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும் கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் போராட்டம் நடத்தினார்கள். இதன் பின்னர் அவர்கள் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

Categories

Tech |