துணிவு திரைப்படம் குறித்து புதிய அப்டேட்டை லைக்கா நிறுவனம் கொடுத்துள்ளது.
வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார்.
தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது. இது பற்றி ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் இதனை போஸ்டர் மூலம் லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து வெளிநாடுகளில் அதிக திரையரங்கில் படத்தை வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு செய்து இருப்பதாகவும் திரையரங்குகளை புக் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.