பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை அரசு சிறப்பு செயலாளர் கருணாகரன் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் அதிகாரி கருணாகரன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு குறித்து அதிகாரி கருணாகரன் கூறியுள்ளதாவது, தமிழக அரசு சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் சென்ற 2 நாட்களாகவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் குண்டடம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம், சமையல் கூடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஜோதியம்பட்டி ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் பூங்கா கட்டுமான பணி, தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கடையில் மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் பற்றியும் தாசில்தார் அலுவலகத்திலும் ஆய்வு நடத்தப்பட்டது. அரசின் திட்டங்கள் கால தாமதம் இல்லாமல் விரைவாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.