Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விதை நிலக்கடலையை மானிய விலையில் அரசே வழங்க வேண்டும்… விவசாயி கோரிக்கை..!!!

மானிய விலையில் விதை நிலக்கடலையை அரசே வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்து இருக்கின்றார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்க விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் என பலரும் தங்களின் கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்தார்கள்.

அப்போது சிவவிடுதி ராமசாமி என்பவர் கூறியுள்ளதாவது, காடுவெட்டி விடுதி, சிவவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் 50 ஏக்கர் நிலம் நிலக்கடலை சாகுபடிக்கு தயாராக இருக்கின்றது. தனியாரிடமிருந்து 37 கிலோ விதை நிலக்கடலை ரூபாய் 4500க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வளவு தொகை கொடுத்து எங்களால் வாங்க முடியுமா? ஆகையால் மானிய விலையில் அரசே விதை நிலக்கடலையை வழங்க வேண்டும் என கூறியதோடு முறையாக கடனை திருப்பி செலுத்தியும் வங்கிகளில் பயிர் கடன் தர மறுக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார். இதுபோல பலரும் தங்களின் கருத்துக்களை முன்வைத்தார்கள்.

 

Categories

Tech |