புனரமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளை கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் பொன்மலை ரயில்வே பணிமனையில் பழுதுபார்க்கும் பணிமனைகளில் முதன்மையானதாக திகழ்கின்றது. சென்னை 2020-ஆம் வருடம் இறுதியில் எல்.எச்.பி அவர்களின் விரிவான மறுசீரமைப்பு பணி பொன்மாலை பணிமனைக்கு வழங்கப்பட்டதில் முதல் இரண்டு எல்.எச்.பி பவர் கார்கள் புனரமைக்கப்பட்டு 2021 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.
இதை அடுத்து டீசல் பணிமனையானது பழுது பார்க்கும் பணியில் அனுபவம் தேர்ச்சி பெற்று நூறாவது எல்.எச்.பி பவர் காரை புனரமைத்ததன் மூலமாக புதிய சாதனை படைத்திருக்கின்றது. நாட்டில் இருக்கின்ற மற்ற பணிகளை இன்னும் கணக்கே ஆரம்பிக்காத நிலையில் பொன்மலை பணிமனை ஐம்பதாவது என்.எம்.ஜி.எச்.எஸ் பெட்டியை தயாரித்து வரலாற்று சாதனை படைத்திருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் புனரமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் கொடியசைத்து வழி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ரயில்வே அதிகாரிகள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.