மர்ம ஆசாமி ஒருவர் நாய்க்கு மது கொடுத்ததால் மயங்கி விழுந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சி மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் பிரபல திருமண மண்டபங்கள் இருக்கின்றது. இந்த மண்டபத்தின் அருகே செடி கொடிகள் நிறைந்த பகுதியில் மர்ம ஆசாமி ஒருவர் மது போதை அதிகமான நிலையில் அங்கே சுற்றி திரிந்த நாய் ஒன்றியத்துக்கு பிளாஸ்டிக் டம்பளரில் மதுபானத்தை ஊற்றி கொடுத்து இருக்கின்றான். அதை குடித்த நாய் அங்கிருந்து நடக்க முயற்சித்தது. ஆனால் நடக்க முடியாமல் போதை தலைக்கு ஏறியதால் தள்ளாடி தள்ளாடி சென்று தரையிலேயே மயங்கி விழுந்தது. இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.