மடத்துக்குளம் அருகே அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளத்தை அடுத்திருக்கும் சோழமாதேவி வாய்க்காலில் நேற்று முன்தினம் அழுகிய நிலையில் பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த பெண்ணிற்கு சுமார் 60 வயது இருக்கும் என கருதப்படுகின்றது.
உடல் முழுவதும் அழுகிய நிலையில் முகம் சிதைந்து இருப்பதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது. மேலும் அந்தப் பெண் இறந்து சுமார் ஒரு வாரம் இருக்கலாம் என கருதப்படுகின்றது. ஆகையால் அந்தப் பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை தவறி விழுந்து உயிரிழந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.