Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் கவுன்சிலர் தலைமையில் மக்கள் உள்ளிருப்பு போராட்டம்… கோரிக்கை முன்வைப்பு…!!!

தூத்துக்குடியில் கவுன்சிலர் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 34 ஆவது வார்டு அசோக் நகர் 2வது தெருவில் புதியதாக இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகின்றது. இந்த அரங்கத்தில் நேற்று முன்தினம் வார்டு கவுன்சிலர் தலைமையில் அப்பகுதி மக்கள் திடீரென திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, உள்விளையாட்டு அரங்கில் மரப்பலகையிலான தரைத்தளம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தரையின் மேல் மரக்கட்டைகள் மட்டும் பரப்பி அதன் மேல் பலகையை விரித்து தளம் போடப்படுகின்றது.

தரையில் பலகை விரித்து ரன்னர் பலகையும் ராடும் பதிக்காமல் வெறும் பலகை மட்டும் பதித்து தரைத்தளம் அமைக்கப்படுவதால் பயிற்சி பெறும் மாணவ-மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். ஆகையால் தற்போது நடந்து வரும் வேலையை நிறுத்திவிட்டு தரமான தரைத்தளம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

Categories

Tech |