தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் ஆழ்வார்கற்குளம் வடக்கு தெருவை சேர்ந்த தொழிலாளி சிவபெருமாள் என்பவர் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரின் உறவினர்கள் பல இடங்களில் தேடி இருக்கின்றார்கள். ஆனால் அவர் இல்லை. இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பல இடங்களில் தேடியிருக்கின்றார்கள். பின்னர் ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி இருக்கலாம் என போலீசார் எண்ணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். தாமிரபரணி ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டார்கள். ஆனால் இரவு நேரமாகியதால் வெளிச்சம் இல்லாததால் தண்ணீரில் இருந்து வெளியே வந்தார்கள்.
பின் அடுத்த நாள் காலையில் தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள். இதனிடையே சிவபெருமாள் உடல் புளியங்குளம் ஆற்றில் மிதந்தது. இதன்பின் அவரின் உடலை மீட்டு தீயணைப்பு வீரர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தார்கள். இதை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.