தபால் ஊழியரை நியமித்து புதிய கட்டிடத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தாலுகாவிற்குட்பபட்ட பெரியாயிபாளையத்தில் இருக்கும் கிளை தபால் நிலையம் ஓட்டு கட்டிடத்தில் இடிந்து விழக்கூடிய நிலையில் செயல்பட்டு வருகின்றது. இந்த தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு, ஆர்.டி.பகுதி கால சேமிப்பு, செல்வ மகள் சேமிப்பு திட்டம், இன்சூரன்ஸ் தபால் சேவை, விரைவு தபால், பார்சல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இருக்கின்றது. பல பயன்பாடுகளுக்காக மக்கள் வரும் இந்த தபால் நிலையத்தின் மேற்கூரை எப்போது வேண்டுமானாலும் விழுகக்கூடிய நிலையில் இருக்கின்றது.
இது மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றது. இந்த கட்டிடம் கட்டி சுமார் 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த தபால் நிலையத்தில் தபால் ஊழியர், அஞ்சல் அதிகாரி என இரண்டு பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் தபால் ஊழியர் நியமிக்கப்படாததால் 20 வருடங்களுக்கு மேலாக தபால் அதிகாரியே தபால் ஊழியருக்கான வேலையையும் செய்து வருகின்றார். இதனால் அவர் தபால் நிலையத்தில் இல்லாத நேரத்தில் பூட்டப்பட்டு இருக்கின்றது. அப்போது பொது மக்களுக்கு சேவை பாதிக்கப்படுகின்றது. ஆகையால் தபால் நிலையத்தில் தபால் ஊழியரை நியமிப்பதற்கும் புதிய கட்டிடத்தை கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.