இந்திய கபடி போட்டியில் தேர்வு செய்யப்பட்ட குடியாத்தம் மாணவிக்கு நேபாளம் செல்வதற்கு எம்எல்ஏ ரூபாய் 25000 நிதி உதவி வழங்கியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்திருக்கும் மோடிக்குப்பத்தை சேர்ந்த மணி என்பவரின் மகள் சந்தியா. இவர் அரசினர் திருமகள் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகின்றார். இவர் சிறு வயதில் இருந்தே கபடி விளையாட்டில் ஆர்வம் கொண்ட நிலையில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் கோவாவில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று இந்தியாவின் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேபாள நாட்டில் அடுத்த மாதம் நடைபெறும் கபடி போட்டிக்கு இந்திய அணி சார்பாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். இவர் நேபாள நாட்டிற்கு செல்ல எனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிதி உதவி வழங்குமாறு சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு மாணவியை வரவழைத்து ரூபாய் 25 ஆயிரத்திற்கான காசோலையை எம்எல்ஏ வழங்கினார்.