விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் மையம் கூடுதலாக அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.
விழுப்புரம் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாகவும் பயணிகள் கூட்டம் அலைமோதியும் காணப்படும். இங்கு பண்டிகை நேரத்தில் மேலும் பயணிகள் கூட்டம் அலைமோதும். 24 மணி நேரமும் இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இருக்கின்ற நிலையில் இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுகின்றது. இந்த ரயில் நிலையத்தில் பயண சீட்டு முன்பதிவு செய்ய நான்கு மையங்களும் முன்பதிவு அல்லாத பயண சீட்டு வழங்க 3 மையங்களும் இருக்கின்ற நிலையில் முன்பதிவு செய்யும் பயணச்சீட்டு பெறுவதற்கு நான்கு மையங்களில் ஒரே ஒரு மையம் தான் செயல்படுகின்றது.
இதுபோல முன்பதிவு அல்லாத பயணச்சீட்டு 3 இருக்கின்ற நிலையில் 2 மையங்கள் மட்டுமே செயல்படுகின்றது. மற்றவை இயங்குவது இல்லை. இதனால் பயணிகள் பயணசீட்டு வாங்குவதற்கு வெகு நேரம் காத்திருக்க வேண்டி இருக்கின்றது. கூட்டம் அங்கே நிரம்பி வழிகின்றது. ஆகையால் பயணம் சீட்டு வழங்கும் மையத்தை கூடுதலாக திறக்க வேண்டும் என ரயில் பயணிகள் பலரும் நீண்ட நாட்களாக உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வருகின்றார்கள். ஆனால் இது குறித்த நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு அதிகாரிகள் கூடுதல் மையத்தை கால தாமதம் இல்லாமல் திறப்பார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.