Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

20-வது ரூபாய்க்கு சிக்கன் பக்கோடா சாப்பிட்டு… வெறி பிடித்த இளைஞர்கள்…!!!

ஆரணி அருகே உணவு மாதிரி எடுக்கச் சென்ற அலுவலர்கள் மீது சிக்கன் பக்கோடா சாப்பிட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி சாலையில் இருக்கும் ஹவுசிங் போர்டு அருகே வெல்கம் ஷாப் என்ற சிக்கன் கடை செயல்பட்டு வருகின்றது. இந்த கடையில் 100 கிராம் சிக்கன் பக்கோடா ரூபாய் 20 க்கு விற்பனை செய்யப்படுகின்றது இதனால் இங்கு மாலை நேரத்தில் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருக்கும்.

இந்த நிலையில் நேற்று மாலை அந்த கடைக்குச் சென்ற உணவு பாதுகாப்பு துறையினர் உணவு மாதிரிகளை எடுக்க கடைக்குள் சென்றுள்ளார்கள். அப்போது சிக்கன் பக்கோடா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்த இருவர் இந்த கடைக்குள் புகுந்து வெறி வந்தவர்கள் போல் நீ யாருடா சோதனை போட என கேட்டு உணவுத்துறையினரை சரமாரியாக தாக்கியிருக்கின்றார்கள். பின் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்கள். அங்கிருந்து தப்பித்தவர்களை போலீசார் தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |