ராபர்ட் மாஸ்டரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றார்கள்.
பிக்பாஸ் வீட்டில் ரஞ்சிதாவை கிரஸ் என சொல்லிக்கொண்டு அவர் பின்னாலையே சுற்றி வருகின்றார் ராபர்ட் மாஸ்டர். பிக்பாஸில் அவர் செய்யும் சேட்டைகள் அங்கு மட்டும் அல்லாமல் வெளியிலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் ராபர்ட் மற்றும் ரச்சிதாவுக்கு இடையே அதிகமான சென்டிமென்ட் காட்சிகள் நடந்தது. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் பற்றி பிரபல டான்ஸ் மாஸ்டர் ராதிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, ராபஸ் மாஸ்டர் தனது மகளை நினைவு வைத்திருப்பதை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்குது. ஆனால் பிக்பாக்ஸ் வீட்டிற்குள் போய் தன் மகளை பற்றி பேச வேண்டுமா? ராபட்டுக்கு தனது மகள் எங்கே இருக்கிறாள் என தெரியும். நேரில் போய் பார்த்து பேசி இருக்கலாம். அவர் நன்றாக சம்பாதிக்கின்றார். மாதம் மாதம் பணம் அனுப்பி உதவி இருக்கலாம். இதையெல்லாம் செய்யாமல் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று குழந்தை பாசத்தை காட்டுவது டிஆர்பிக்காகத்தான் என நினைக்கத் தோன்றுகின்றது என பேசியுள்ளார். இதையறிந்த நெட்டிசன்கள் ராபர்ட் மாஸ்டரை கலாய்த்து அவரின் செண்டிமெண்ட் பொய் என கூறி வறுத்தெடுத்து வருகின்றார்கள்.