ரஜினிகாந்தை சிவராஜ் குமார் சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பாதாக சொல்லப்படுகின்றது. ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கின்றார். இவரும் படப்பிடிப்பில் தற்போது ஈடுபட்டுள்ளார். முன்னதாக சிவராஜ் குமார் ரஜினி சந்தித்து பேசி உள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. ஆனால் இதை படக்குழு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் சிவராஜ்குமாரும் சிவகார்த்திகேயனும் பப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதனால் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கின்றாரா அல்லது சிவராஜ் குமாரை சந்திக்க சென்றாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.