Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியாமணி நடிக்கும் “டிஆர்.56″… இசை மற்றும் டிரைலர் வெளியீடு… ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!!

பிரியாமணி நடிக்கும் புதிய திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பிரியாமணி. இத்திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதன்பின் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தி ஃபேமிலி வுமன் என்ற வெப் தொடரில் நடித்ததால் அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது.

இவர் தற்போது அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது ஹீரோயினாக பிரியாமணி நடிக்கும் டிஆர் 56 என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று உள்ளது. இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 9-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளார்கள்.

Categories

Tech |