Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்… மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!!

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றார்கள்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையிலான போலீசார் செய்திருந்தார்கள்.

Categories

Tech |