ஏலகிரி மலையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று எம்எல்ஏ மக்களிடம் குறை கேட்டறிந்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றார்கள். இங்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஏலகிரி மலையில் நடந்து வரும் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து ஏலகிரி மலையில் ராயனேரி பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் இடத்திற்கு 3 கிலோ மீட்டர் நடந்து சென்ற அவர்களிடம் குறை கேட்டு அறிந்தார்.
அப்போது கிராம மக்கள் இதுவரையிலும் சாலை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றோம். ரேஷன் கடைகளுக்கு சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டி இருக்கின்றது. கர்ப்பிணி பெண்கள் சுமார் 6 கிலோ மீட்டர் வரை நடந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக கூறினார்கள். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மண் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.