விஜய், அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்குவேன் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வெப் தொடரில் அறிமுகமாகின்றார். அவர் நடிக்கும் வதந்தி என்ற வெப்த்தொடரை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றார்கள். இது குறித்து தயாரிப்பாளர்கள் கூறியுள்ளதாவது, இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் ஒரு தெளிவான சிந்தனையை கொண்டிருப்பாதால் வித்தியாசமான தனித்துவம் வாய்ந்த மற்றும் மனதில் பதியக்கூடிய உள்ளடக்கங்களை கொண்ட கதைகளத்தை உருவாக்குவது அடிப்படையான ஒன்றாக இருக்கின்றது. அந்த வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்கள்.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் டிசம்பர் இரண்டாம் தேதி அமேசானில் நேரடியாக வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளதாவது, நீ நல்லது செய்தால் உனக்கு நல்லது நடக்கும் என்பார்கள். நான் நடிப்பதற்கு தான் வந்தேன் தற்போது தான் அமைந்திருக்கின்றது. நான் உதவி இயக்குனர் மூலமாக இந்த வாய்ப்பை பெற்றுக் கொண்டேன். சிறந்த இயக்குனர்கள் உடன் இணையும் போது ஒருவர் சிறந்த நடிகராக முடியும். தற்போது என்னை வைத்து இயக்கவே எனக்கு நேரமில்லை. கடவுள் அருள் இருந்தால் நிச்சயம் விஜய், அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்குவேன் என கூறியுள்ளார்.