Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னை வெளியே அனுப்புங்க”… கதறும் தனலட்சுமி… கடுப்பில் ரசிகர்கள்…!!!

என்னை வெளியே அனுப்புங்க என தனலட்சுமி கதறுகின்றார்.

டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி பொதுமக்கள் சார்பாக வந்திருக்கும் இரண்டு போட்டியாளர்களின் ஒருவராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றார். இந்நிகழ்ச்சி ஆரம்பமானதிலிருந்து என்னை வெளியே அனுப்புங்க நான் வீட்டுக்கு போறேன் என கூறி வருகின்றார் தனலட்சுமி. இந்த நிலையில் இந்த வார தலைவர் போட்டிக்கு தனலட்சுமி, மைனா, கதிரவன் உள்ளிட்டோர் தேர்வாகி இருந்தார்கள்.

வீட்டின் தலைவருக்கான போட்டி வாரத்தின் முதல் நாள் நடைபெறும். தலைவர் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக நான் தலைவரானால் இவர்களை எல்லாம் இந்த அணிகளில் இருந்து வேறு அணிக்கு மாற்ற வேண்டும் என தனலட்சுமி பேசுகின்றார். இதைத்தொடர்ந்து கால்பந்து விளையாட்டு போன்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் மைனா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன் மணமுடைந்த தனலட்சுமி படுக்கையறைக்குச் சென்று நான் வீட்டுக்கு போறேன், என்னை வெளியே அனுப்புங்க என புலம்புகின்றார்.

மைனா கீழே விழுந்த நேரத்தில் அவருடைய ஆதரவாளர் கோல் அடித்ததாகவும் தனலட்சுமி தலைக்கு மேல் பந்து போனதால் மைனாவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியிருக்கின்றார். மேலும் வீட்டு பணிக்கு பிரிக்கும் போது மைனா ஏற்கனவே குழுக்களை பிரித்துவிட்டு நம் முன்பு நடிக்கின்றார் என மீண்டும் அழுது கொண்டு வீட்டுக்கு போறேன் என கூச்சலிட சகப் போட்டியாளர்களுக்கு கடுப்பாகிறது. இதைப் பார்த்த பார்வையாளர்கள் தயவு செய்து தனலட்சுமிக்கு வீட்டின் பிரதான கதவை திறந்து விடுங்கள் பிக்பாஸ் என கடுப்புடன் கூறி வருகின்றார்கள்.

Categories

Tech |