கடைசி நேரத்தில் திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டதால் மணமகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரவரக்கோடு மறுத்தாக்கவிளை பகுதியைச் சேர்ந்த 32 வயது எலக்ட்ரீசியனுக்கும் குளப்பாறை பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் சென்ற மாதம் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயக்கப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் மூன்று மணிக்கு தேமானுர் பகுதியில் இருக்கும் ஒரு ஆலயத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண ஏற்பாடுகளை மணமகன் வீட்டார் தடபுடலாக செய்திருந்தார்கள்.
திருமணம் நேரம் நெருங்கியதை தொடர்ந்து மணமகனுக்கு மஞ்சள் காமாலை இருக்கின்றது. ஆகையால் அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மாட்டோம். திருமணத்தை நிறுத்துகின்றோம் என மணப்பெண்ணை கவனித்து வருபவர்களின் தரப்பில் இருந்து செல்போன் மூலம் கூறப்பட்டது. இதை கேட்ட மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தார்கள். இதன்பின் மணப்பெண்ணை கவனித்து வருபவர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் சரியான பதில் கூறவில்லை.
இதனால் மணமகன் மீட்டர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எனக்கும் மணமகளுக்கும் பாதிரியார்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது கடைசி நேரத்தில் திருமணத்தை திடீரென நிறுத்தி விட்டார்கள். நோய் உள்ளவனுக்கு பெண் தர முடியாது. திருமணத்தை நிறுத்துகின்றோம் என கூறி விட்டார்கள். நான் ஏற்கனவே இந்த நோய் குறித்த அவர்களிடம் கூறி இருக்கின்றேன். என்னை திட்டமிட்டு அவமானப்படுத்தி வேதனை அடைய செய்துள்ளார்கள். ஆகையால் மணப்பெண்ணை நேரில் அழைத்து வந்து விசாரணை நடத்தி எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறியிருக்கின்றார்.
இது போலவே மணப்பெண்ணின் சித்தியும் மணமகனுக்கு ஆதரவாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் ஏற்கனவே எனது அக்காள் மகளுக்கு நடக்க இருந்த திருமணத்தை அவளை பராமரித்து வருபவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து அறிய முயன்ற போது அவளை பார்க்க விடாமல் தடுக்கின்றார்கள் எனக்கூறி இருக்கின்றார். பின்னர் போலீசார் இருதரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து விசாரணை நடத்தியும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.