Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆபத்தான நிலையில் பள்ளி கட்டிடம்… மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை… பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு..!!!

இடிந்து விழும் நிலையில் இருக்கும் பள்ளி கட்டிடத்தை சரி செய்யக்கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை அருகே இருக்கும் தினையத்தூர் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் கிராமத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் 150 குழந்தைகள் படித்து வருகின்றார்கள். இந்த கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கின்றது. சில பகுதிகளில் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் கயிறு கட்டியும் கட்டைகள் வைத்தும் சமாளித்து வருகின்றோம்.

தற்போது மழைக்காலம் என்பதால் ஆபத்தான கட்டிடத்தில் படிக்க குழந்தைகளை அனுப்ப பயமாக இருக்கின்றது. எங்களின் குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இதுகுறித்து பல முறை மனு அளித்தும் எந்த ஒரு பலனும் இல்லை. இனி கால தாமதம் இல்லாமல் பள்ளி கட்டிடத்தை பராமரிக்காவிட்டால் பல மாணவர்களின் உயிர்பறிப்போகும். உயிரிழந்த பின் சரி செய்து எந்த ஒரு பயனும் இல்லை. ஆகையால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Categories

Tech |