30-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தாவிட்டால் வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் நகராட்சி நிர்வாகம் முப்பதாம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. இது குறித்து நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, காங்கேயம் நகராட்சியில் சென்ற மூன்று வருடங்களுக்கு மேலாக குடிநீர் கட்டணம் செலுத்தாத 33 குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பு சென்ற ஒரு வாரத்தில் துண்டிப்பு செய்யப்பட்டிருக்கின்றது.
இதுபோல சொத்து வரி செலுத்துவதற்கும் இம்மாத 30-ம் தேதியே கடைசி நாளாகும். ஆகையால் அதற்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும். செலுத்தாத பட்சத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும். வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும். ஆகையால் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய நேரத்திற்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.