பொதுக்கழிப்பிடம் தூய்மையாக இல்லாமல் இருந்தால் புகார் கொடுக்க புதிய வசதி அறிமுகமாக உள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தில் பிரத்தியேக செல்போன் ஆப் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதில் சுகாதாரம் சார்ந்த உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பணிகள் இணையம் வாயிலாக பதவேற்றப்படுகின்றது. இந்த நிலையில் பொதுக்கழிப்பிடத்தில் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் க்யூ ஆர் கோடு உதவியுடன் செல்போன் மூலம் புகார் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.
அந்த வகையில் தூய்மை இந்தியா திட்ட இணையதள செயலியுடன் இணைக்கப்பட்ட கியூ ஆர் கோடு பொதுக்கழிப்பிடங்களின் முகப்பில் வைக்கப்படும். பொதுக் கழிப்பிடங்கள் பராமரிப்பு இல்லாமலும் சுகாதாரம், தண்ணீர், விளக்கு வசதி இல்லாமலும் இருந்தால் குறைகளை தெரிவிக்க தங்கள் செல்போனில் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து தூய்மை இந்தியா திட்ட இணைய செயலியில் புகார் தெரிவிக்கலாம். இந்த தகவல் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றடையும். இதன் பின் அடுத்த ஆறு மணி நேரத்தில் குறை தீர்க்கப்படும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இத்திட்டம் விரைவில் ஆரம்பமாக உள்ளது.