இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூரில் இருக்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உலக மீனவர் தினத்தையொட்டி நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
இதன்பின் நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும் காப்பீட்டின் நிறுவனம் மற்றும் மீன்வள பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், எம்.எல்.ஏ ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.