தீக்குளிக்க முயன்ற இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பார்த்திபனூர் பரளை பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் தனது கைக்குழந்தையுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வருவதாகவும் திருமணத்தின்போது தனக்கு பெற்றோர்கள் 10 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்தை கொடுத்ததை அவர் என்னிடம் தர மறுக்கின்றார். ஆகையால் அவரிடம் இருந்து எனது நகையையும் பணத்தையும் மீட்டுத் தருமாறு ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.
இதன்பின் வெளியே வந்த அவர் தன் மீதும் தனது குழந்தை மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதை பார்த்த அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினார்கள். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தண்ணி காட்டிவிட்டு அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் மண்ணெண்ணெயை தன் மீதும் தனது குழந்தை மீதும் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததால் சப் இன்ஸ்பெக்டர் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்கள்.