Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேநீர் குடித்துவிட்டு.. பணம் தராத பா.ஜ.க எம்.எல்.ஏ…!!!

பாஜக எம்.எல்.ஏ தேநீர் குடித்துவிட்டு பணம் தரவில்லை என டீக்கடை உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தற்போதைய எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான பாஜகவை சேர்ந்த கரண்சிங் வர்மா தனது தொகுதிக்கு காரில் சென்று இருக்கின்றார்.

அப்போது அவரின் காரை மறித்த தேநீர் கடை உரிமையாளர் ஒருவர் கரண்சிங் வர்மா மற்றும் அவருடன் வந்த கட்சியினர் தேநீர் குடித்துவிட்டு முப்பதாயிரம் ரூபாய் பணம் கொடுக்காமல் இருப்பதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதை கரண் சிங் வர்மாவும் மறுக்காமல் இருந்தது அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகி இருந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |