Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெட்கக்கேடு.. தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு…!!!

தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர் அதிகரித்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்திருப்பதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணியாற்றவும் மாடுகள் ஆடுகள் மேய்க்கவும் விவசாயத்துக்காகவும் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் முறை அதிகரித்து பல்வேறு வழக்குகள் பதிவாகி வருவதாகவும் இந்த பகுதியில் சிறப்பு குழந்தைகள் மறுவாழ்வு மையம் அமைத்து மீட்கப்படும் குழந்தைகளை பயிற்சி அளிப்பதுடன் அவர்களுக்கான இழப்பீடை விரைவில் வழங்க உத்தரவிடுமாறும் கோரி இருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்த போது மத்திய, மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர்கள் முறையை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்கள். தமிழ்நாட்டில் 180 விழுக்காடு குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்திருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்கள்.

இந்த வழக்கு குறித்து மத்திய பெண்கள் குழந்தைகள் நலத்துறை, தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு துறை, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஆகிய துறையின் செயலாளர்கள் தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர், செயலாளர்கள் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்கள்.

Categories

Tech |