கில்லர் மாடலாக ஐபோன் SE 4 களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE சீரிஸ் மூலம் பட்ஜெட் விலை iphone-களை விற்பனை செய்து வருகின்றது. இதுவரை ஐபோன் SE பிரிவில் மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வெளியாக இருக்கும் புதிய மாடல் ஐபோன் SE 4-ன் சில மாற்றங்களை செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த போன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகும் எனவும் இந்த போன் கில்லர் மாடலாக இருக்கும் எனவும் ஏராளமான ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு சவால் விடும் வகையில் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.