விஜய் அணிந்து வந்த சட்டையின் விலை அறிந்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களின் அந்தஸ்தை காட்டுவதற்கு விலை உயர்ந்த பொருட்களை அணிவது வழக்கம். அந்த வகையில் நடிகர் விஜய் அணிந்து வந்த சட்டையின் விலை நெட்டிசன்கள் பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.
அதாவது நடிகர் விஜய் அண்மையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் அணிந்து வந்த சட்டை குறித்து பலரும் ஆன்லைனில் தேடி உள்ளார்கள். அதில் விஜய் அணிந்திருந்த சட்டையின் விலை ரூ.32,000 என தெரிகின்றது. இதை அறிந்த நெட்டிசன்கள் பலரும் பெரும்பாலான இந்தியர்களின் மாத வருமானம் கூட இவ்வளவு இருக்காது. இது நடிகர்களின் செல்வ செழிப்பை காட்டுவதாக உள்ளது எனக் கூறி வருகின்றனர்.