தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் சென்ற ஜனவரி 22 முதல் செப்டம்பர் 2022 வரை 262 இரு சக்கர வாகன விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றது. இதில் 126 பேர் இறந்துள்ளார்கள். தற்போது தலைக்கவசம் அணியாமல் வந்தால் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுவதோடு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல் பெட்ரோல் பங்க்-ல் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்காமல் இருப்பது பற்றி நடவடிக்கை எடுக்கலாம் என சாலை பாதுகாப்பு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இரு சக்கர வாகன விபத்தில் பின்னால் அமர்ந்து இருக்கும் பெண்களே அதிகளவில் உயிரிழக்கின்றார்கள். இதுகுறித்து விவாதிக்கப்பட்டதில் 126 மனித உயிரிழப்புகளில் 99% உயிரிழப்பு ஹெல்மெட் அணியாமல் வந்ததே காரணமாகும். ஆகையால் வாகன ஒட்டி மட்டுமல்லாமல் உடன் அமர்ந்து வருபவரும் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இரண்டு நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யக்கூடாது. நகர எல்லைக்குள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மிகாமல் வாகனத்தை இயக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கின்றது.