Categories
சினிமா தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸின் புதிய திரைப்படம் ட்ராப்..? காரணம் என்ன..? கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு.!!!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படம் ட்ராப் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா-3 திரைப்படத்தை தொடர்ந்து அதிகாரம், ருத்ரன், சந்திரமுகி-2, துர்கா என தனது கைவசம் நான்கு திரைப்படங்களை வைத்திருக்கிறார். இதில் ருத்ரன் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் தயாரிப்பில் துறை செந்தில்குமார் இயக்கத்தில் அதிகாரம் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என செய்தி வெளியானது.

ஆனால் தற்போது இத்திரைப்படம் டிராப் செய்யப்பட்டு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்தி கசிந்து இருக்கின்றது. நயன்தாராவின் 81-வது திரைப்படத்தை துறை செந்தில்குமார் இயக்க இருக்கின்றார். ராகவா லாரன்ஸும் தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். இதனால் அதிகாரம் திரைப்படம் டிராப் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.

Categories

Tech |