கோல்டு திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் இயக்கத்தில் தொடர்ந்து கடந்த 2015 ஆம் வருடம் மலையாளத்தில் மட்டும் வெளியான பிரேமம் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் மூலம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரை உலகிலும், தமிழ் திரை உலகிலும் பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு இவர் இயக்கும் படம் “கோல்டு” படத்தில் பிரித்திவிராஜ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. முன்னதாக இத்திரைப்படம் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் வெளியாகவில்லை. தற்போது புதிய ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகின்ற டிசம்பர் 1-ம் தேதி தியேட்டரில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
#Gold Release on Dec 1st 2022🥳✨❤️ pic.twitter.com/yUmm4XblRQ
— Magic Frames (@magicframes2011) November 23, 2022