Categories
சினிமா தமிழ் சினிமா திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலியில் இருக்கும் பூர்வீக வீட்டிற்கு சென்ற கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் போட்டோஸ்…!!!

பூர்வீக வீட்டிற்குச் சென்ற கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் முன்னாள் நடிகை மேனகாவின் இரண்டாவது மகளாவார். தற்போது கீர்த்தி சுரேஷ் மாமன்னன், சைரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் படபிடிப்பு இல்லாத நேரத்தில் வெளிநாடுகளுக்கு செல்வது உறவினர்களை பார்க்க கிராமங்களுக்கு செல்வது உள்ளிட்ட பழக்கங்களை கடைபிடித்து வருகின்றார்.

குடும்பத்தினருடன் கீர்த்தி சுரேஷ்

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருங்குடியில் இருக்கும் தனது மூதாதையரின் பூர்வீக வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருக்கின்றார். பழமை வாய்ந்த அந்த வீட்டின் முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதன் பின்னர் வீட்டுக்குள் சென்று தரையில் அமர்ந்து அங்கிருக்கும் உறவினர்களை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்த திருங்குடி நம்பி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

Categories

Tech |