ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நீது சந்திரா நடிக்கின்றார்.
யாவரும் நலம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தீராத விளையாட்டுப் பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் நடிகை நீது சந்திரா. இவர் சென்ற 2017 ஆம் வருடம் வெளியான வைகை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் 5 வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கின்றார். ஹீரோவாக சுந்தர்.சி நடிக்கும் ஒன் டூ ஒன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை திருஞானம் இயக்க கன்னட நடிகை ராகினி திவேதி, சுந்தர்,சி மனைவியாக நடிக்கின்றார். இப்படத்தில் அனுராக் காஷ்யப் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த நிலையில் தற்போது நீது சந்திரா படத்தில் இணைந்திருக்கின்றார். இப்படத்தின் படபிடிப்பானது சென்னையில் நடைபெற்று வருகின்றது.